மராத்தா சமுதாயத்தினர் மீண்டும் போராட்டம்… மகாராஷ்ட்ராவில் பரபரப்பு
மகாராஷ்ட்ரா:
மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்… இதனால் பெரும் பரபரப்பு உருவாகி உள்ளது; என்ன விஷயம் தெரியுங்களா?
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராத்தா சமுதாயத்தினர் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய அந்த சமூகத்தினர், வன்முறையை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பெட் மாவட்டத்தின் பார்லி நகரில் மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மராத்தா சமுதாயத்தினரை விடுவிக்க வேண்டும்,
அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அனைத்தும் திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மும்பை அருகே மராத்தா சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒருவர் வீட்டில் விஷம் குடித்தார்.
மராத்தா சமுதாயத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் மகாராஷ்ட்ராவில் பதற்றநிலை உருவாகி உள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி