மருத்துவமனையிலேயே தங்கிய கனிமொழி… வாசலில் திரண்டு கதறும் தொண்டர்கள்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நேற்று பின்னடைவு அடைந்தது. இதையடுத்து நேற்று இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர் ராசாத்தி அம்மாளும், கனிமொழியும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி நள்ளிரவில் உடல் நிலை மோசமானது. 24 மணி நேரத்திற்கு பின்னரே அடுத்த கட்டநிலையை சொல்ல முடியும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை நடந்தது.
இரவு 10.10 மணிக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார். நேற்று இரவு மருத்துவமனைக்கு மீண்டும் வந்த கனிமொழி மற்றும் ராசாத்தியம்மாள் இருவரும் அங்கேயே இருந்தனர். பின்னர் கனிமொழி இன்று காலை 6.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 7.45 மணிக்கு மீண்டும் மருத்துவமனை வந்துள்ளார்.
இந்நிலையில் புதுடில்லியில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க. ராஜ்யசபா எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் இன்று காலை மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி