மருத்துவமனை வந்து கருணாநிதி நலம் விசாரித்தார் கமல்

சென்னை:
சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து கமல் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வருகை தந்துள்ளார்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிவதற்காக கமல் மருத்துவமனை வந்துள்ளார். கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டநிலையில், கோபாலபுரம் வீட்டிற்கே, கமல் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!