மருத்துவ மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை

சென்னை:
மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது… உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரிகளில், மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம் மற்றும் படடயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் தெரிவித்துள்ளதாவது:

ஊக்கத்தொகையானது, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், முதலாம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும்,3 ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.35, 000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ரூ.35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும்முதலாம் ஆண்டு படிக்கும் உயர் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும்,2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.43,500 ஆகவும், 3,4,5,6ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.45 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!