மர்மக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்

ஈரான் நாட்டில் ராணுவ அணிவகுப்பில் புகுந்த மர்மக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் அவாஸ். இங்கு நேற்று உயர் புரட்சி காவலர்கள் என்ற ராணுவ பிரிவின் அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் காக்கி சீருடை அணிந்தபடி வந்த மர்மக் கும்பல் திடீரென அந்த அணிவகுப்பில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், ராணுவ வீரர்கள் 29 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலில் ஒரு பெண், குழந்தை உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு முன்பு தக்பிரி என்று அழைக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியானது.

Sharing is caring!