மறுக்கின்றன… எதிர்கட்சிகள் மறுக்கின்றன… மத்திய அமைச்சர் பேச்சு

புதுடில்லி:
மறுக்கிறது… மறுக்கிறது… எதிர்கட்சிகள் மறுக்கிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராஜ்நாத் பேசியதாவது:

2 எம்.பி.,க்களுடன் துவங்கிய பா.ஜ., தற்போது பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. தூய்மையான ஜனநாயகத்தை உறுதி செய்ய எதிர்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும். ஆனால், ஜனநாயகத்தை தடம் புரள செய்கின்றன.

காஸ் மானியத்தை விட்டு கொடுத்த மக்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, சிக்கல் இருந்தாலும் பா.ஜ.,வை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். நாடு பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளது. தோல்வியடையும்.தீர்மானத்தை கொண்டு வந்துள்ள கடசிகளுக்குள் ஒற்றுமையில்லை.

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். 2030க்குள் பொருளாதாரத்தில் வளர்ந்த முதல் 3 நாடுகளுக்குள் இந்தியா வரும். இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள எதிர்கட்சிகள் மறுக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!