மறுப்பது ஏன்? கேள்வி எழுப்பி உள்ளார் ராகுல்காந்தி

புதுடில்லி:
மறுப்பது ஏன்? மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

ரபேல் விவகாரம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது:

ரபேல் விமானம் விலையை மக்களுக்கு தெரிவிக்க மத்திய அரசு மறுப்பது ஏன்? ரபேல் தொடர்பாக விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அனில் அம்பானி நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் ரூ.284 கோடியை முதலீடு செய்துள்ளது.

அதே தொகைக்கு அம்பானி நிலம் வாங்கியுள்ளார். ஆனால் டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி பொய் சொல்கிறார். அம்பானியை காப்பாற்ற முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியல் லாபத்திற்காக எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. மாநில மற்றும் லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், நடக்கும் அரசியல் விளையாட்டில் அனில் அம்பானி மற்றும் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!