மறு தணிக்கை செய்யுங்க… கலெக்டரிடம் புகார் மனு

மதுரை:
மறு தணிக்கை செய்யுங்க… செய்யுங்க என்று கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் செலவினம் குறித்து மறு தணிக்கை செய்ய வேண்டும்,’ என, கலெக்டர் வீரராகவராவிடம் புகார் அளிக்கப்பட்டது. மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநகராட்சியின் 2014-15, 2015-16, 2016-17 ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டது பாராட்டுக்குரியது. அதிலுள்ள செலவினங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. குறிப்பாக, மூன்று
ஆண்டுகளில் 911 கோடியே 79 லட்சத்து 8,038 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஊழியர்களின் மருத்துவ செலவு 35 லட்சம் 65 ஆயிரம் ரூபாய் என உள்ளது. அதேநேரம் ஊழியர்களின் வேறு செலவினங்களில் 16.27 லட்சம், சீருடைக்கு 36.27 லட்சம் ரூபாய் என உள்ளன. பராமரிப்பிற்காக 11.96 கோடி ரூபாய் என உள்ளது.

ஆனால் 2015-16 நிதியாண்டில் இதன் செலவு 5.88 கோடி ரூபாய் தான் காட்டப்பட்டுள்ளது. இது போல் பல செலவினங்கள் அதிகமாக காட்டப்பட்டுள்ளதால் மறு தணிக்கை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!