மலாவி கனமழை, வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆனது

பிளான்டையர்:
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

மலாவியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்றும், பலரை காணவில்லை என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், மலாவியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!