மலேசியாவில் முதன் முறையாக 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி

மலேசியாவில் முதன் முறையாக 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மலேசியா தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றுள்ளார். அவருடன் 13 அமைச்சர்களும் பதவியேற்றனர். தற்போது அமைச்சரவையை மகாதீர் முகமது விரிவாக்கம் செய்துள்ளார். கூடுதலாக 15 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சீக்கியர் சமூகத்தை சேர்ந்த கோபிந்த் சிங் டியோ தொலைத்தொடர்பு அமைச்சராகவும், குலசேகரன் மனித வளத்துறை அமைச்சராகவும், சிவராசா ராசைய்யா நீர் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகவும், வாய்தா மூர்த்திக்கு வெளியுறவுத் துறை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜரத்தினம் பிரதமர் அலுவலக இந்திய விவகார துறை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 28 பேர் கொண்ட மலேசிய அமைச்சரவையில் 4 தமிழர்கள் உள்பட 5 இந்தியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!