மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கடந்த 2009 ஆம் வருடம் அப்போதைய பிரதமரான நஜிப் ரசாக் தொடங்கியது 1 மலேசியன் டெவலப்மெண்ட் பெர்காத் என்னும் நிதி நிறுவனம். இதன் மூலம் கோடிக்கணக்கில் நஜிப் ரசாக் ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் நஜிப் ரசாக் தோல்வி அடைந்தார். புதிய பிரதமரான மகாதீர் முகமது முன்னாள் பிரதமர் மீது நடவடிக்கை எடுத்தார்.

நஜிப மற்றும் அவருடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களும் பல ஆவணங்களும் சிக்கி உள்ளன. இந்த ஆவணங்கள் குறித்து மகாதீர், “முன்னாள் முதல்வர் கையெழுத்து இல்லாமல் அந்த நிதி நிறுவனத்தில் எந்த ஒரு பரிவர்த்தனையும் நடக்காது. இந்த ஊழலுக்கு நஜிப் ரசாக்தான் முழுப் பொறுப்பு” என தெரிவித்தார்.

இந்நிலையில் நஜிப் ரசாக்கை அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் நாளை அவர் மீதான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!