மழை பெய்து வருவதால் மலைக்கு செல்ல அனுமதி மறுப்பு
விருதுநகர்:
மழை பெய்து வருவதால் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மழை பெய்வதை பொருத்தே நாளை மலைக்கு செல்ல அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S