மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு

சென்னை:
மழை பெய்ய வாய்ப்பு இருக்கு… இருக்கு என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கு அரபிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
தேனி, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் செங்கோட்டை, வால்பாறையில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!