மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மும்பை:
மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு நடக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சமூகத்தினர் கடந்த ஜூலை 27-ம் தேதி நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 27 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இதனால் பிரச்னை பெரிதானது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகை வலியுறுத்தி மஹாராஷ்டிராவில் மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பை ஒட்டி மாநிலத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் கடையடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு 2200 போலீசார், 9000 ஹோம்கார்டுகள், சிஐஎஸ்எப் மற்றும் எஸ்ஆர்பிஎப் படைவீரர்கள் உள்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஆங்காங்கே சி,சி,டி,வி, கேமராக்களில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!