மாஜி அமைச்சரின் நாகரீகமற்ற பேச்சு… குவியும் கண்டனங்கள்

பெங்களூரு:
இப்படியா பேசுவது… பேசுவது… என்று முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. என்ன விஷயம்ன்னா…

மகன் இறந்தது சித்தராமையாவிற்கு கடவுள் கொடுத்த தண்டனை என முன்னாள் அமைச்சர் ஜனர்த்தன் ரெட்டி கூறியுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ., ஆட்சியில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஜனார்த்தன் ரெட்டி. இவர் மீது சுரங்க முறைகேடு புகார் கூறப்பட்டது. இதனால் பதவி விலகினார். பின்னர், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஜனார்த்தன் ரெட்டி சிறையில் அடைக்கபட்டு, ஜாமீனில் வெளிவந்தார்.

சித்தராமையாவின் மகன் ராகேஷ் (39), 2016 ல் உடல்உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஜனார்த்தன் ரெட்டி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எனது குழ்தைகளிடம் இருந்து என்னை பிரித்துவிட்டதால், சித்தராமையாவுக்கு கடவுள் தண்டனை வழங்கி உள்ளார்.

ராமாயணத்தில், மானை கொல்வதாக நினைத்து, இளைஞனை கொன்றதால், அவர்களின் பெற்றோர் வேதனையால் அரசர் தசரதர் அளித்த சாபத்தை குறிப்பிட்ட ஜனார்த்தன் ரெட்டி, தானும் அவ்வாறு வேதனைப்பட்டேன். அதற்கு காரணமானவர்களுக்கு கடவுள் உரிய தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதனை மேற்கோள் காட்டி முன்னாள் முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் கூறியுள்ளதாவது: எனது மகன் இறந்தது, கடவுள் எனக்கு அளித்த தண்டனை என ஜனார்த்தன் ரெட்டி கூறியுள்ளார். அவர் செய்த பாவத்திற்காக, அவரது குழந்தைகளுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது என தான் வேண்டி கொள்வதாக கூறியிருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஜனார்த்தன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்களும் எழுந்தபடியே உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!