மாஜி இஸ்ரோ தலைவர் பாஜவில் இணைந்தார்

திருவனந்தபுரம்:
முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் பாஜ கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த 2003 முதல் 2009 வரை இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயர் பா.ஜ.,வில் இணைந்தார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா முன்னிலையில் மாதவன் நாயர் கட்சியில் இணைந்தார்.

அவருடன் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சி ஜி.ராமன் நாயர், பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவர் பிரமிளா தேவி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கர்ணாகுளம் மாவட்ட துணைத்தலைவர் திவாகரன் நாயர், மலங்காரா தேவாலயத்தின் தாமஸ் ஜான் ஆகியோரும் பா.ஜ.,வில் இணைந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!