மாஜி நீதிபதி பெயரில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் பதிவு

இஸ்லாமாபாத்:
மாஜி நீதிபதி பெயரில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் முன்னாள் நீதிபதி பெயரி்ல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் நீதிபதி சிக்கந்தர் ஹயத் (83).

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கார் தொடர்பான வழக்கில் சட்டமீறல் இருப்பதல் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தன்னிடம் ஒரே ஒரு கார் மட்டும் தான் உள்ளது. எப்படி எனக்கு நேட்டீஸ் அனுப்பலாம் என அபாராதம் விதித்த வரிவிதிப்புத்துறையிடம் விசாரித்தார்.

அப்போது சிக்கந்தர் ஹயாத் பெயரில் மொத்தம் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது. எனினும் தான் பயன்படுத்தாத காருக்கு அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பஞ்சாப் வரிவிதிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!