மாஜி பிரதமர் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு… இது பாகிஸ்தானில்

இஸ்லாமாபாத்:
நிறுத்தி வைப்பு… நிறுத்தி வைப்பு… மாஜி பிரதமர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள், மருமகன் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நான்கு சொகுசு வீடுகள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் உறுதியானது.

இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், அவரது மகள் மரியமுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மருமகன் முகமது ஷப்தாருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த 3 பேரின் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.

இதையடுத்து 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம், நவாஸ் மனைவி குலுஷம் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க 3 பேருக்கும் தற்காலிக பரோல் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!