மாஜி பிரதமர் மீதான புகார்… 22 வங்கி அதிகாரிகள் சோதனை

கோலாலம்பூர்:
மாஜி பிரதமர் மீதான புகார் குறித்து 22 வங்கி அதிகாரிகள் 3 நாட்களுக்கும் மேலாக சோதனையை நடத்தி உள்ளனர்.

மலேசியா நிதித்துறையின் கீழ் இயங்கும், மேம்பாட்டு நிறுவனமான 1எம்டிபி(1MDB)யில் இருந்த நிதியை தன் சொந்த கணக்குக்கு மாற்றி ஊழல் செய்ததாக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜீப் படுதோல்வி அடைந்தார். தொடர்ந்து இவர் மீதான முறைகேடு குறித்து, புதிய அரசு விசாரணையை துவக்கி உள்ளது. நஜீப்பின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 273 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1800 கோடி) மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு நிதித்துறையில் இருந்த தொகை என்று பலவகையிலும் நஜீப்பின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகாரிகளின் சோதனையில் 1400 வைர நெக்லஸ்கள், 2200 மோதிரங்கள், 2100 வலையல்கள், 2800 ஜோடி காதணிகள் உட்பட 12,000 நகைகள், 567 விலையுயர்ந்த ஹேண்ட்பேக்குகள், 423 ரோலக்ஸ் வாட்ச் உள்ளிட்ட 100 ரக விலையுயர்ந்த வாட்ச்கள், 234 ஜோடி சன்கிளாஸ்கள், 28.6 மில்லியன் டாலர் (ரூ.200 கோடி) பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைக்கடிகாரங்கள் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வங்கி அதிகாரிகள் 3 நாட்களுக்கும் மேலாக இந்த சோதனையை நடத்தி உள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!