மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து

சென்னை:
ரத்து செய்தது கோர்ட்… முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது கோர்ட்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான, வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா, லண்டனில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஆகியோர் மீது வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துதுறை அனுமதி கேட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வருமான வரித்துறை கருப்பு பண தடுப்பு சட்டத்தின் மீதான நடவடிக்கையை ரத்து செய்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!