மாஜி முதல்வரை கொலை செய்யவே போலீசாரிடம் துப்பாக்கி பறிப்பு
முசாபர்நகர்:
போலீசாரிடம் இருந்து துப்பாக்கி பறித்துச் சென்றது பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரை கொலை செய்ய என்று தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், போலீசாரிடம் இருந்து, துப்பாக்கிகளை பறித்துச் சென்ற 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்புடன் இணைந்து, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், அகாலிதள கட்சியின் மூத்த தலைவருமான, பிரகாஷ் சிங் பாதலை கொலை செய்வதற்காக, துப்பாக்கிகளை இவர்கள் திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S