மாஜி முதல்வர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது சிபிஐ

ஜம்மு:
குற்றச்சாட்டை பதிவு செய்துட்டாங்க… மாஜி முதல்வர் மீது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. 2002 முதல் 2011 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் பரூக் அப்துல்லா.

இந்த காலக்கட்டத்தில் ரூ. 113.67 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ., குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் தலைமை மாஜிஸ்திரட் முன்பாக நடந்து வரும் இந்த வழக்கில் பரூக் நேற்று ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!