மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறன் வளர்ப்பு

புதுக்கோட்டை:
மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறனை வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் புத்தக வாசிப்பு திறனை வளர்த்து கொள்ளும் பொருட்டு அரசு பள்ளிகளில் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி வடவாளம் ஊர்ப்புற நூலகம் சார்பில் வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமை வகித்து, புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை நூலகர் மேரி செய்திருந்தார்.

விராலிமலை கிளை நூலகத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு விராலிமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியை ரெஜினா தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ரமா முன்னிலை வகித்தார். இதில் வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சவுமா பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கந்தசாமி ஆசிரியைகள் உட்பட 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவிகள் கலந்துகொண்டனர். நூலகர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!