மாணவிக்கு பாலியல் தொந்தரவு… போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

திருவண்ணாமலை:
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கம் கண்ணக்குருக்கையில் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுபவர் கண்ணன். இவர் அங்கு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பள்ளி வகுப்பறையில் கண்ணன் கடுமையாக தாக்கப்பட்டார்.

தொடர்ந்து மாணவி கொடுத்த புகாரில் கண்ணனை செங்கம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!