மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் ராணுவ வீரர் பங்கு

ஹரியானா மாநிலத்தில் 19 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் ராணுவ வீரர் ஒருவரும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயதுடைய மாணவி ஒருவர், கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்திற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஒருசிலர் அவரை கடத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு அந்த மாணவியை பேருந்து நிறுத்தம் அருகே தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மாணவியை வன்கொடுமை செய்ததில் ராணுவ வீரரும் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹரியானாவின் தலைமை காவல்துறை அதிகாரி பிஎஸ் சந்து கூறுகையில், “ மாணவியை வன்கொடுமை செய்த குற்றத்தில் பன்கஜ் ஃபௌஜி என்ற ஒருவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

அவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விரைந்துள்ளனர். அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார். மாணவியை வன்கொடுமை செய்த அனைவரும் இளைஞர்கள் “ என்று கூறியுள்ளார்.

மாணவியை மருத்துவமனையில் சந்தித்தப்பிறகு எஸ்.பி.நஷ்னீன் பாசின் பேசுகையில், “ பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருகிறார், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் காணப்பட்டுள்ளனர் “ எனக் கூறினார். இதனை தொடர்ந்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு ராணுவ வீரர் உள்பட மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் (இடமிருந்து வலமாக) மனிஷ், நிசு மற்றும் ராணுவ வீரர் பன்கஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

” எனது மகள் பிரதமர் மோடியின் கையால் விருது வாங்கியுள்ளார். சிபிஎஸ்சி பாடத்தில் முதலிடம் பிடித்ததற்காக விருது வாங்கியுள்ளார். அப்போது மோடி எனது மகளை நன்றாக படிக்கும் படி கூறினார். ஆனால் அது எப்படி முடியும் ? எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று மாணவியின் தாய், தனது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடும் மாநிலங்களில் ஹரியானா புது சாதனையை படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 40 ஆண்கள் சேர்ந்து 4 நாட்களாக 22 வயதுடைய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Sharing is caring!