மாநில அந்தஸ்து கோரி காங்., நடத்த உள்ளது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை:
புதுச்சேரி:
மாநில அந்தஸ்து கேட்டு காங்கிரஸ் சார்பில் டில்லியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு, டில்லியில் 4ம் தேதி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து புதுச்சேரி காங்., தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஜனநாயக கடமையை ஆற்றமுடியாமல், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியாமல், நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து வருகிறது. புதுச்சேரி, தனி மாநில அந்தஸ்து பெறாததால், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட்டு வருகிறது.

இதனால் புதுச்சேரியின் தனித்தன்மையை காக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்பட்டு மக்கள் பணியாற்றுவதற்கு ஒரே வழி தனிமாநில அந்தஸ்து பெறுவதுதான். எனவே, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டுமென்று சட்டசபையில் அரசின் தீர்மானமாக, நிறைவேற்றி பலமுறை அனுப்பியும், மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

புதுச்சேரி மாநில மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான, தனிமாநில அந்தஸ்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 4ம் தேதி காலை 10 மணியளவில், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள் அனைத்து கட்சியினர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!