மாநில ஐகோர்ட்டுகளுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

புதுடில்லி:
புதிய தலைமை நீதிபதிகள் 5 மாநில ஐகோர்ட்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ஐகோர்ட் நீதிபதி ரமேஷ் ரங்கநாத், உத்தர்காண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், உத்தர்காண்ட் ஐகோர்ட் மூத்த நீதிபதி விஜய் குமார் பிஸ்த், சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கோல்கட்டா ஐகோர்ட் மூத்த நீதிபதி தேபாசிர் கர் குப்தா, அதே கோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சோமையா போபண்ணா, கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும்,மும்பை ஐகோர்ட் நீதிபதி நரேஷ் ஹரீஷ் சந்திர பாட்டீல், அதே கோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!