மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்

சென்னை:
கண்டனம்… மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது சென்னை ஐகோர்ட். எதற்காக தெரியுங்களா?

தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து வழக்குகளில் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

தி.மு.க., வை சேர்ந்த ஆஸ்.எஸ் பாரதி தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டிலும், சென்னை ஐகோ்ட்டிலும் வெவ்வேறு நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து முன்னுக்குப் பின் முரணான தகல்களை அளித்தது ஏன் என கண்டனம் தெரிவித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!