மானிய விலையில் விதைகள்… விவசாயிகளுக்குதாங்க

தஞ்சாவூர்:
மானிய விலையில்… விதைகள்… டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான விதைகள், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி துவங்கியுள்ளது.இந்த சாகுபடியின் போது, தனியாரிடம் தரமற்ற விதைகளை வாங்கி பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சில விவசாயிகள், சொந்தமாக சேமித்து வைத்த விதைகளை பயன்படுத்தி, சாகுபடி செய்தும், நஷ்டத்தில் சிக்குகின்றனர். இப்பிரச்னையால், உணவு தானிய உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதையடுத்து, வேளாண் விரிவாக்க மையங்கள் சார்பில், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை, தட்டுப்பாடின்றி வழங்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இங்கு, 50 சதவீத மானியத்தில், விதைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அக்டோபரில் துவங்கும் வடகிழக்கு பருவமழையால், பயிர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, நீண்டகால மற்றும் மத்திய கால நெல் ரகங்களை மட்டுமே, சாகுபடி செய்ய வேண்டும் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீண்டகால நெல் ரகங்கள், 160 நாட்களிலும், மத்திய கால நெல் ரகங்கள், 140 நாட்களிலும், அறுவடைக்கு தயாராகி விடும். டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை, சம்பா சாகுபடிக்கு, 6,625 டன் நெல் விதைகள் தேவை. வேளாண் விரிவாக்க மையங்களால், 1,600 டன் வரை, விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன; 4,200 டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. கிலோ, 32 ரூபாய் மதிப்புள்ள விதைகளை, 16 ரூபாய்க்கு, விவசாயிகள் பெறலாம். எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், சிறுதானிய விதைகளும், மானிய விலையில் வழங்கப்படுகின்றன என்றார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!