மான் வேட்டையாடிய 2 பேர் கைது

கன்னிவாடி:
மான் வேட்டையாடி அதை சமைத்துக் கொண்டிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகேயுள்ள ஆடலூர் வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி மாவட்டம் தில்லை நகரை சேர்ந்த பாலாஜி (38) மற்றும் லால்குடியை சேர்ந்த சரவணன்(49) ஆகியோர் மானை வேட்டையாடி சமைத்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து 4 கிலோ மான்கறி மற்றும் ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!