மாமல்லபுரத்தில் இன்று மாலை நாட்டிய விழா தொடக்கம்

மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இன்று நாட்டிய விழா நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில், நாட்டிய விழாவை, அமைச்சர்கள் நடராஜன், பெஞ்ஜமின் ஆகியோர் இன்று துவக்கி வைக்கின்றனர். தமிழக, மத்திய சுற்றுலாத் துறைகள் இணைந்து, மாமல்லபுரத்தில், ஆண்டு இறுதியில், சர்வதேச பயணியருக்காக நடத்தும் நாட்டிய விழா, இன்று துவங்குகிறது.

இவ்வூர் கடற்கரைக்கோவில் அருகில் இன்று மாலை 5:30 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் நடராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்ஜமின் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

சுற்றுலா ஆணையர் வெ.பழனிகுமார், கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மா, ஆட்சியர் பா.பொன்னையா உட்பட பலர் பங்கேற்கின்றனர்.துவக்க விழாவில், மாலை 5 மணிக்கு மதுரை, கலை மேம்பாட்டு மைய குழுவினரின், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்; மாலை, 6:30 மணிக்கு, சென்னை, பார்வதி ரவி கண்டசாலாவின், பரத நாட்டியம் நடைபெறும்.

விழா, ஜன., 20 வரை, தினமும் மாலை 6 மணி – இரவு 8 மணி வரை நடந்து, பரதம், குச்சுப்புடி, மோகினி, கதக்களி, ஒடிசி உள்ளிட்ட, பல்வேறு மாநில பாரம்பரிய நடனங்கள், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!