மாயன் அதிசய உண்மைகள்…உலகம் எப்போ அழியும்?

மாயன் நாகரீகத்தைப் பற்றிய அதிசயிக்க வைக்கும் 17 உண்மைகள்

நீங்கள் மாயன் நாகரீகத்தைப் பற்றி இதுவரை கேள்வி பட்டிருக்கிறீர்களா? உலகின் மிக பழமையான அறிவுபூர்வமான நாகரீகங்களில் ஒன்று மாயன் நாகரீகம். சித்திர எழுத்து வடிவம், கலை, கட்டிடக் கலை, கணிதம், நாட்காட்டி மற்றும் வானியல் ஞானம் ஆகியவற்றுக்காக இன்றும் போற்றப்படும் மெதோமெரிக்கன் நாகரீகம் இது.

நீங்கள் இந்த நம்பமுடியாத அதிசயிக்க வைக்கும் நாகரீகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா? கவலை வேண்டாம். உங்களுக்காவே தந்திருக்கிறோம் மாயன் நாகரீகத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்.

உலகத்தோற்றம் – நாட்காட்டி மாயன்களைப் பொறுத்தவரை இந்த உலகம் ஆகஸ்ட் 11, 3114 BC இல் தோன்றியது. அவர்களது காலெண்டரும் அன்று தான் ஆரம்பிக்கிறது. அதில் தான் உலகத் தோற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் உயிருடன் மாயன் நாகரிகம் அழியவில்லை என்றும், மாயன் வம்சாவளியினர் இன்னும் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் பரவலாக கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் எவ்வளவு தூரம் உண்மைகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை.

கல்வியறிவு மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி அறிவு நிறைந்தவர்களாக இருந்தனர். தங்களுக்கென எழுத்துக்கள் வடிவமைத்து வைத்திருந்தனர். புத்தகங்கள் கூட எழுதி இருக்கிறார்கள்.

சித்திர எழுத்து வடிவம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பொறுத்தவரை, மாயன்களின் சித்திர எழுத்து வடிவமே மிகவும் சிரமமானது. எந்த அளவிற்கு என்றால், 1950களின் பிற்பாதி வரை அவற்றை புரிந்து கொள்ளவே கடினமாக இருந்தது.

பூஜ்யம் பூஜ்யத்தை உபயோகப்படுத்திய முதல் மக்கள் மாயன் மக்களே என்று கூறப்படுகிறது. ஆனால் உலக கணித வரலாற்றில் பூஜ்ஜியம் என்பது இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதனால் சில சமயம் இந்தியர்களுக்கும் மாயன் உலகத்தினருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற குழப்பங்களும் விவாதங்களும் கூட எழுந்தன.

Sharing is caring!