“மாற்றி அமைக்கப்பட்டுள்ளது… குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது”

புதுடில்லி:
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது… மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என்ன விஷயம் தெரியுங்களா?

ராகேஷ் அஸ்தானா வழக்கில், பாரபட்சமற்ற, நேர்மையான, துரிதமான விசாரணை நடத்தும் வகையில் குழு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ கூறி உள்ளது.

இது தொடர்பாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த குழுவில் சிறந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். சிபிஐ அலுவலகத்தில், சோதனை மற்றும் சீல் வைப்பு என்பது பொய்யான தகவல். சிபிஐ தனிப்பட்ட நபர்களுக்கானது அல்ல. நாட்டிற்கானது. இதனால், அமைப்பின் பெயருக்கு பாதிப்பு கிடையாது. எந்த வகையான விசாரணை தேவையோ அது நடக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சிபிஐ இயக்குனர் சுதந்திரமாக செயல்படும் வகையில், அவருக்கு 2 ஆண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டு உள்ளது. சிபிஐ இயக்குனரை மாற்றுவது என்பது உயர்மட்ட குழு எடுக்க முடியும். மத்திய அரசின் முடிவானது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது எனக்கூறி உள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!