மாற்றுங்க… போர்க் கொடி தூக்கி போராட்டம்… இது மிசோராமில்

அஸிவால்:
மாற்றணும்… என்று போர்க் கொடி தூக்கி போராட்டங்கள் நடந்து வருகிறது. யாரை? எதற்கு என்று தெரியுங்களா?

மிசோரம் தலைமை தேர்தல் ஆணையரை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடந்தது. இதையடுத்து டில்லி வருமாறு தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பி. ஷாசாங்கிற்கு தலைமை தேர்தல் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மிசோரம் மாநில சட்டசபைக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் மிசோரம் மாநில இளைஞர் அமைப்பினர் தேர்தல் ஆணையம் முன்பாக போராட்டம் நடத்தினர். இதில் தேர்தல் ஆணையரை உடன் மாற்ற வேண்டும், ப்ரூ சமூகத்தினர் மிசோரமில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதால் இரு தொகுதிகளில் போட்டியிட உள்ள மிசோரமின் தற்போதைய முதல்வரான லால் தன்ஹவாலா வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

இதற்கிடையே மிசோரம் தலைமை தேர்தல் ஆணையர் டில்லி சென்றுள்ளதாகவும், அதுவரை தேர்தல் பணிகளை பார்வையிட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!