“மாற உள்ளது… உச்சரிக்க எளிமையாக மாற உள்ளது”

புதுடில்லி:
மாற உள்ளது… மாற உள்ளது… உச்சரிக்க எளிமையாக மாற உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உச்சரிக்க எளிமையாகவும், எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையிலும், ஐ.ஆர்.சி.டி.சி.,யின்(இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம்) பெயர் மாற உள்ளது. இதற்கான அறிவிப்பு 2 மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி.,யின் பெயரை மாற்ற கடந்த ஆண்டு இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு 1,852 பேர் தங்கள் தேர்வு செய்த பெயரை பதிவு செய்திருந்தனர். இதிலிருந்து 700 பேரின் பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அதிலிருந்து ஒரு பெயரினை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு பதிலாக தேர்வு செய்ய சிறந்த பெயர் பட்டியலை கொண்டு வரும்படி இந்தியன் ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

உச்சரிக்க எளிதாக இருக்கும் படியும், மனதில் பதியும்படியும் அப்பெயர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 2 மாதத்திற்குள் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!