மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் மொஹமட் வெற்றி

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற இப்றாஹீம் மொஹமட் சோலிஹ்ஹூக்கு  அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் மொஹமட் சோலி வெற்றி பெற்றுள்ளார்.

மொஹமட் இப்ராஹிம் 1,37,616 வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்ற 2,62,135 பேரில், 2,33,877 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல்லா கயூம் 96,132 வாக்குகளையே பெற்றுள்ளார்.

அத்தோடு, மாலைதீவில் மட்டுமன்றி உலகின் 4 நாடுகளிலும் வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, மொத்தமாக 89.22 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்றதுடன், வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை என மாலைதீவின் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர், மாலைதீவில நடைபெற்ற 3 ஆவது ஜனாதிபதி தேர்தலாகும்.

ஜனாதிபதி மற்றும் உபஜனாதிபதி ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்கவுள்ளனர் எனவும் மாலைதீவின் வௌிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!