மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள்
மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அண்மையில் மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் அந்நாட்டு கரையோரப் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களும் நேற்று விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் பயணித்த இழுவைப் படகுடன் இவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தப் படகு மாலைதீவை அண்டிய கடற் பிரதேசத்தில் மிதந்து காணப்பட்டது. விடயத்தை அறிந்தவுடன் அமைச்சு துரித நடவடிக்கை எடுத்தது. படகை திருத்தி அமைப்பதற்காக நாட்டுக்கு எடுத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S