மின்சார வாகன மயமாகும் சிலி

சிலியின் துறைமுகத்திற்கு வந்த மிகப் பாரிய வர்த்தக கப்பலொன்று அந்த நாட்டின் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் முக்கிய பணியை மேற்கொண்டுள்ளது. ஒரு கப்பல் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியும் என்று சிந்திக்கின்றீர்களா!

அதற்கு காரணம் அந்த பிரம்மாண்டக் கப்பலில் வந்திறங்கியது அனைத்து மின்சார பாவனை வாகனங்கள் தான். இலத்தீன் அமெரிக்காவில் நாடு முழுவதும் இந்த மின்சார கார்கள் மற்றும் பேருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளன.

கடந்த வாரம் சிலியின் சான் என்டனியோ துறைமுகத்திற்குக வந்திறங்கிய கப்பலில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள் சீனாவில் இருந்து எடுத்து வரப்பட்டன.

சிலி நாட்டு மக்கள் தங்கள் பொது போக்குவரத்து முறையை புரட்சிகரமாக்கும் நோக்கிலேயே இந்த புதிய மின்சார பஸ்கள் மற்றும் கார்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தலைநகரான சாண்டியாகோவின் மோசமான புகைப் பிரச்சினைக்கு லட்சிய திட்டமாக, மின் ஸ்கூட்டர்கள், கார்கள் மற்றும் டாக்சிகள் மற்றும் சுரங்கத் தொழிலில் பயன்பாட்டிற்கான லொரிகள் ஆகியவற்றை முற்றிலுமாகவே, அல்லது பகுதியளவிலோ மின்சார பாவனையைக் கொண்டு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

கனிம வளமுள்ள சிலி – உலகின் மிகப்பெரிய தாமிர தயாரிப்பாளர் மட்டுமன்றி, மின்சார வாகன பேட்டரிகளின் ஒரு முக்கிய கூறான லித்தியத்தின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளது.

இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை பத்து மடங்காக அதிகரிக்கும் திட்டத்தை சிலி கொண்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் தூய்மையான இயக்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள வளரும் நாடுகளில் முன்னணியில் சிலியை தரப்படுத்த முடியும் என்று இந்த செயற்திட்டங்கள் எடுத்து செல்லப்படுகின்றன.

Sharing is caring!