மின்னல் தாக்கி பெண் உட்பட 2 பேர் பலி

விருத்தாசலம்:
மின்னல் தாக்கியதில் வயலில் வேலைப் பார்த்த பெண் உட்பட 2 பேர் பலியாகினர்.

விருத்தாசலத்தில், கனமழையுடன் மின்னல் தாக்கியதில், வயலில் களைபறித்த பெண் உட்பட இருவர் இறந்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. அப்போது விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில், வயலில் களைபறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுப்ரமணியன் மனைவி ஜெயலட்சுமி (43) மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சுப்ரமணியன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதேபோல் விருத்தாசலம் பூதாமூரில், ஹாலோபிளாக் கம்பெனியில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் 22 வயது இளைஞர் பலியானார். 26 வயது இளைஞர் கவலைக்கிடமான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!