மின் உற்பத்தி பாதிப்பு : சென்னையில் மின் தட்டுப்பாடு வரலாம்

சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால்செனையில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் வட சென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் முதல் அலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இரண்டாம் நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இரண்டாம் நிலையில் உள்ள முதல் அலகில் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் அங்கு உற்பத்தி செய்யப்படும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுள்ளனர். அதனால் அந்த பணி முடிவடையும் வரை மின் உற்பத்தி அங்கு நடைபெறாது.இந்நிலையில் மாதாந்திர பராமரிப்புக்காக ஒன்றாம் நிலையில் உள்ள இரண்டாம் அலகின் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. அதனால் மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுளது. இதனல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது

Sharing is caring!