மின் சீரமைப்பு களப்பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரம்… அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை:
மின் சீரமைப்பு களப்பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:

மின் சீரமைப்பு களப்பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர். கிராமங்களுக்கும் மின்சப்ளை கிடைக்கும் வகையி்ல் பணிகள் நடக்கின்றன. குடிநீர் பிரச்னையை சமாளிக்க பம்பு செட்டுகள், டேங்கர் லாரிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய பாதிப்பு அதிகம். ஆறு லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!