மின் மயமாக்கும் பணி… சேலம் – கரூர் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்

சேலம்:
மின் மயமாக்கும் பணி நடப்பதால் சேலம்- கரூர் இடையே ரயில் சேவை நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது:

சேலம் கரூர் இடையே ரயில் பாதை மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வரும் 19ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரையில் மேற்கண்ட ரயில் பாதையில் சேவை நிறுத்தப்படுகிறது.

மேலும் சென்னை -செங்கோட்டை இடையே வரும் நவம்பர் 6 ம்தேதி மற்றும் டிசம்பர் 25 ம் தேதி மாலை 4.15 மணிக்கு சுவிதா ரயில் சுவிதா ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை – நெல்லை இடையே டிசம்பர் 7 மற்றும் 21லும் நெல்லை – சென்னை இடையே டிசம்பர் 30ம் தேதியும், புதுச்சேரி – சந்திரகாசி இடையே டிசம்பர் 29-ம் தேதியும், கொல்லம் – தாம்பரம் இடையே டிச., 25, 29 மற்றும் 2019 ஜன.,1 தேதிகளிலும் மற்றும் தாம்பரம் – கொல்லம் இடையே டிச., 7 மற்றும் 21 தேதிகளிலும் சுவிதா ரயில் இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!