மீடியாபார்ட் பத்திரிகை செய்தியால் மீண்டும் புயல்…!

பிரான்ஸ்:
மீண்டும் ரபேல் போர் விமானம் பற்றிய புயலை கிளப்பி உள்ளது ஒரு செய்தி.

பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 2016, செப்., 23ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்த விவகாரம் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளதாக மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை டஸ்சால்ட் நிறுவனமும், இந்திய அரசும் மறுத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!