மீண்டும் சுனாமியா? போலீசார் எச்சரிக்கை… மக்கள் ஓட்டம்

இந்தோனேஷியா:
மீண்டும் சுனாமி தாக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மக்கள் அச்சத்துடன் வெளியேறினர்.

இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சுனாமியால் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்றும் சம்பர் ஜெயா என்ற கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேறினர். இது குறித்து காவல்துறையினர் மசூதி ஸ்பீக்கர் மூலமாக எச்சரித்தனர்.

இதனால்  ‘தண்ணீர் வருகிறது எல்லாம் மலை மேல் ஏறுங்கள்” என்று கூச்சலிட்டபடி மக்கள் ஓடினர். நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள், குழந்தைகளுடன் கிராமத்தைவிட்டு வெளியேறி அப்பகுதி மலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். கடற்கரையிலிருந்து 700 மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள், அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு தன்னார்வ தொண்டர் ஒருவர் கூறும்போது, “தண்ணீர் உயரம் அதிகரிப்பது அவ்வளவு ஆபத்தானதாக இல்லை. ஆனால் இங்கு பல வதந்திகள் சுற்றி வருகின்றன”. சனியன்று இங்கு தாக்கிய சுனாமியால் இப்பகுதி மக்கள் வீடு திரும்ப பயப்படுகின்றனர். “சுனாமி பயத்தில் மீளாமல் அப்பகுதி மக்கள் கடற்கரை பக்கம் செல்லவே பயப்படுகின்றனர்” என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!