மீண்டும் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்..!! திணறிப் போன அமெரிக்கா..!

கொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்கு பின் வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாகாணங்களில் தளர்த்தப்பட்டன. வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு மீண்டும் வேகமாக கொரோனா பரவ தொடங்கியது.

கடந்த சனிக்கிழமை மட்டும் ஃப்ளோரிடா மாகாணத்தில் கொரோனாவால் 9500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியது. வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 9000 ஆக இருந்தது.இதனையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அமெரிக்காவில் 125,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.இது தொடர்பான பேசிய மருத்துவர் ஃபெளசி, “சில பகுதிகளில் முன்னதாகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுதான் இப்போது அதிகரித்திருக்கும் கொரோனா தொற்றுக்குக் காரணம்.

மக்கள் நெறிமுறைகளை பின் பற்றுவது இல்லை. இதுவே பிறருக்கு கொரோனா பரவ காரணமாக உள்ளது என கூறினார்.கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் முகமாக மருத்துவர் ஃபெளசி இருக்கிறார்.

என்ன நடக்கிறது ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸில்? கடந்த 24 மணி நேரத்தில் ஃப்ளோரிடாவில் 9,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.ஃப்ளோரிடாவில் மட்டும் இதுவரை 132,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,300 பேர் பலியாகி உள்ளனர்.

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை டெக்சாஸ், ஃப்ளோரிடா மற்றும் அரிசோனா மாகாணங்கள் நிறுத்திவைத்தன. ஃப்ளோரிடா ஆளுநர் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தார்.ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி அமெரிக்காவில் இப்போது வரை 2,508,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

125, 511 பேர் பலியாகி உள்ளனர். 679,308 பேர் மீண்டுள்ளனர்.சர்வதேச அளவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது.

Sharing is caring!