முகமது ஜின்னா வாழ்ந்த வீட்டுக்கு உரிமை கோருது பாகிஸ்தான்

புதுடில்லி:
எங்களுடையது… எங்களுடையது என்று ஜின்னா வாழ்ந்த வீட்டுக்கு பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா வாழ்ந்த வீடு உள்ளது. இந்த வீடு, நம் நாட்டின் வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கு பாகிஸ்தான் அரசு உரிமை கோரியுள்ளது. இதற்கு பதிலளித்த, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார், ”ஜின்னா இல்லம், எங்கள் அரசின் சொத்து. அதை, புதுப்பித்து பயன்படுத்த உள்ளோம். இதில் உரிமை கோர, பாகிஸ்தானுக்கு எந்த முகாந்திரமும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!