முக்கொம்பில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கி அரசாணை

திருச்சி:
முக்கொம்பில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் புதிய அணை ரூ.387.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமானதால் சில மாதம் முன் அணை உடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதை பார்வையிட்ட முதல்வர் புதிய அணை கட்டப்படும் என்று அறிவித்தார்.

ஏற்கனவே உடைந்த அணையின் கீழ்திசையில் 75 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டப்படுகிறது. இதன் மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மாவட்ட விளைநிலங்கள் பயன்பெறும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!