முடிக்க வேண்டும்… 3 மாதத்தில்… தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:
முடிக்க வேண்டும்… முடிக்க வேண்டும்… 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?

மூன்று மாதத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது மற்றும் அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எந்த தகவல்களையும் தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த சுப்ரீம் கோர்ட், லோக் ஆயுக்தா அமைப்பதில் அக்கறை இல்லையா? கால தாமதம் செய்வதை விரும்புகிறதா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மேலும், லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், பிப்ரவரி மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!