முடிஞ்சிடுச்சு… தொகுதி பங்கீடு முடிஞ்சிடுச்சு…!

புதுடில்லி:
தொகுதி பங்கீடு முடிஞ்சிடுச்சு… முடிஞ்சிடுச்சு… என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பீஹாரில் ஆளும் நிதிஷ்குமார் கட்சியுடன் பா.ஜ. இடையே பார்லி. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி பீஹாரில் மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 5 தொகுதிகளும், உபேந்திரா சிங் குஷ்வாகா கட்சிக்கு 2 தொகுதிகளும் பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொகுதி பங்கீடு பிரதமர் மோடி, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா, நிதிஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!