முடியலை… விற்பனை செய்ய போறோம்… ராஜ்கபூர் குடும்பத்தினர் முடிவு

மும்பை:
முடியலை… விற்பனை செய்ய போறோம்… ராஜ்கபூர் குடும்பத்தினர் முடிவு செய்து  இருக்காங்களாம். என்ன விஷயம் தெரியுங்களா?

மும்பையின் பிரபல ஆர்.கே. ஸ்டூடியோவை விற்பனை செய்ய ராஜ்கபூர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பட உலகில் புகழ் பெற்ற கபூர் குடும்பம். இந்த குடும்பத்தை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூரால் 1948-ம் ஆண்டு மும்பையின் செம்பூர் என்ற பகுதியில் கட்டப்பட்டது இந்த படப்பிடிப்புத் தளம்

இந்தியில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனைகள் புரிந்த நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன.. மும்பையின் அடையாளமாக இன்றும் கருதப்படும் புகழ்பெற்றது இந்த ஸ்டூடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்த ஸ்டூடியோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் பலத்த பொருட் சேதம் அடைந்தது. இதை சீரமைக்க முடியாமல் கபூர் குடும்பத்தினர் திணறிவந்தனர். இனிமேலும் இதை பராமரிக்க முடியாது என்பதால் விற்பதே மேல் என முடிவு செய்துள்ளனர்.

70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்புகள் நடப்பது குறைந்து போனது. டி.வி. சீரியல்களுக்காக சூட்டிங் மட்டும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் தற்போதைய நிலையில் ஸ்டூடியோவை மீண்டும் சரிசெய்ய கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதை விற்றுவிடுவதை தவிற வேறு வழியில்லை என்ற முடிவுக்கு கபூர் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.

விரைவில் ஸ்டூடியோ கைமாற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!